திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நாகார்ஜுனா. இவர் அறிமுகமான முதல் தெலுங்கு படம் ‘விக்ரம்’. 1986-ஆம் ஆண்டு வெளியான இந்த படத்தை இயக்குநர் வி.மதுசூதனன் ராவ் இயக்கியிருந்தார். அதன் பிறகு பல தெலுங்கு படங்களில் நடித்த நாகார்ஜுனா ஹிந்தி திரையுலகில் 1990-ஆம் ஆண்டு ‘ஷிவா’ படம் மூலம் என்ட்ரியானார்.
‘ஷிவா’-விற்கு ஹிந்தி, தெலுங்கு என இரண்டு மொழிகளிலும் செம பிஸியாக நடித்து வந்தார் நாகார்ஜுனா. பின், 1997-ஆம் ஆண்டு வெளியான ‘ரட்சகன்’ படம் மூலம் தமிழ் திரையுலகிலும் கால் பதித்தார். இந்த படத்தை இயக்குநர் பிரவீன் காந்தி இயக்கியிருந்தார். ‘ரட்சகன்’ படத்துக்கு பிறகு தமிழில் ராதாமோகனின் ‘பயணம்’, கார்த்தியின் ‘தோழா’ ஆகிய படங்களில் நாகார்ஜுனா நடித்தார்.
இவரின் பல தெலுங்கு படங்கள் தமிழிலும் டப் செய்யப்பட்டு வெளியாவதால், தமிழ் நாட்டிலும் நாகார்ஜுனாவிற்கு மிகப் பெரிய ரசிகர் பட்டாளம் இருக்கிறது. தற்போது, நாகார்ஜுனா – இயக்குநர் ராம் கோபால் வர்மா கூட்டணியில் 2018-ஆம் ஆண்டு வெளியான ‘ஆஃபிசர்’ என்ற தெலுங்கு படம் தமிழில் டப் செய்யப்பட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதன் தமிழ் வெர்ஷனுக்கு ‘சிம்டாங்காரன்’ என டைட்டில் சூட்டப்பட்டு ட்ரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது. தமிழில் விஜய்யின் ‘சர்கார்’ படத்தில் ‘சிம்டாங்காரன்’ என்ற சூப்பர் ஹிட்டான பாடல் இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
https://twitter.com/Pro_Bhuvan/status/1319606656322342912