நடிகர் நகுல் வெளியிட்ட SPB ட்ரிபியூட் வீடியோ!

  • October 8, 2020 / 02:15 PM IST

தமிழில் ஷங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளியான “பாய்ஸ்” திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகர் நகுல்.

பிறகு காதலில் விழுந்தேன், மாசிலாமணி, கந்தக்கோட்டை, வல்லினம், தமிழுக்கு என் ஒன்றை அழுத்தவும், நாரதன், பிரம்மா, செய் போன்ற படங்களில் நடித்து தமிழ் திரைப்படவுலகில் தனக்கென தனி இடத்தை பிடித்துள்ளார். இவர் நடிகர் மட்டுமல்லாது பின்னணி பாடகராகவும் இருந்துள்ளார்.

தமிழ் சினிமாவின் சிறந்த பாடல்களை கொடுத்த இனிமையான குரலுக்கு சொந்தக்காரரான எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் உடல்நலக்குறைவால் செப்டம்பர் 25ஆம் தேதி காலமானார். இவரது இழப்பு தமிழ் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இந்நிலையில் நடிகர் நகுல் எஸ்பிபி அவர்களுக்கு ஒரு பாடலை கிட்டாரில் வாசித்து ட்ரிபியூட் வீடியோ ஒன்றை தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus