ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013ஆம் ஆண்டு பின்னணி பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இந்நிலையில் தம்பதிகளுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. ஆனால் அதிகுறித்த எந்த தகவலும் ஜி.வி.பிரகாஷ் தரப்பில் வெளியிடாமல் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஜி.வி.பிரகாஷ் குழந்தைக்கு அன்வி என்று பெயர் வைத்திருப்பதாக நடிகரும், பிக்பாஸ் பிரபலமுமான கணேஷ் வெங்கட்ராமன் தனது சமூகவலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
மேலும் ஊரடங்கு முடிந்த பின்னர் அன்வியைக் காண கண்டிப்பாக நாங்கள் வருவோம் என்று தெரிவித்திருக்கும் கணேஷ் வெங்கட்ராமன், அப்போது எங்களது அன்பை பகிர்ந்து கொள்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளர், நடிகர், தயாரிப்பாளராக வலம் வரும் ஜி.வி.பிரகாஷ் கடந்த 2013-ம் ஆண்டு பின்னணி பாடகி சைந்தவியை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிக்கு 6 ஆண்டுகள் கழித்து அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளது குறிப்பிடத்தக்கது.