“மீண்டும் விஜய்யுடன் பணியாற்றுவதில் மகிழ்ச்சி”… ‘தளபதி 65’யில் ஒப்பந்தமான ‘நண்பன்’ பட பிரபலம்!

  • February 25, 2021 / 12:06 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி மாதம் 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். விஜய்யின் அடுத்த படமான ‘தளபதி 65’யை நெல்சன் இயக்க, ‘சன் பிக்சர்ஸ்’ தயாரிக்க உள்ளது. இந்த படத்துக்கு ‘ராக்ஸ்டார்’ அனிருத் இசையமைக்க உள்ளார். இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் விஜய்யுடன் டூயட் ஆடி பாடப்போவது பூஜா ஹெக்டே என்று சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்கான ப்ரீ-புரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. படத்தின் ஷூட்டிங்கை வருகிற ஏப்ரல் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இந்த படத்துக்கு ஒளிப்பதிவு செய்ய மனோஜ் பரமஹம்சா கமிட்டாகியுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவலை ஒளிப்பதிவாளர் மனோஜ் பரமஹம்சாவே தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இவர் ஏற்கனவே விஜய்யின் ‘நண்பன்’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus