அஜித்துடன் இணைந்து நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ண நந்தா.. அந்த மெகா ஹிட் படம் எது தெரியுமா?

  • January 20, 2022 / 02:56 PM IST

முன்னணி நடிகர்களில் ஒருவரான ‘தல’ அஜித் நடித்து 2019-ஆம் ஆண்டு வெளியான ‘நேர்கொண்ட பார்வை’ சூப்பர் ஹிட்டானது. ஆகையால், ‘நேர்கொண்ட பார்வை’ படத்தின் இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூருடன் மீண்டும் அஜித் கூட்டணி அமைத்திருக்கிறார். அந்த படம் தான் ‘வலிமை’. இதில் ‘தல’ அஜித் காக்கி சட்டை அணிந்து பவர்ஃபுல்லான போலீஸ் ரோலில் வலம் வந்து எதிரிகளை துவம்சம் செய்யப் போகிறாராம்.

சமீபத்தில், இந்த படத்தின் ட்ரெய்லர் மற்றும் பாடல்களை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் ரிலீஸ் செய்தது. இந்த ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. மிக விரைவில் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

‘தல’ அஜித்தின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘மங்காத்தா’. இந்த படத்தில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா நடிக்க, பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான வெங்கட் பிரபு இதனை இயக்கியிருந்தார். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. இதில் முக்கிய ரோலில் அஷ்வின் நடித்திருந்தார். ஆனால், அந்த ரோலில் நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் வெங்கட் பிரபுவின் முதல் சாய்ஸாக இருந்தது நந்தா தானாம். அப்போது கால்ஷீட் பிரச்சனை காரணமாக நந்தாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus