நானி – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடித்துள்ள ‘தசரா’ எப்படி இருக்கு?… வெளியானது முதல் விமர்சனம்!

  • March 28, 2023 / 06:20 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘தசரா’. இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கியுள்ளார்.

இதில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சாய் குமார், சமுத்திரக்கனி, ஷைன் டாம் சாக்கோ மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார், நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது. சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட பாடல்கள், டீசர் மற்றும் ட்ரெய்லர் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது.

படத்தை வருகிற மார்ச் 30-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்தை பார்த்து ரசித்த வெளிநாட்டு தணிக்கை குழு உறுப்பினர் ஒருவர் ட்விட்டரில் பாராட்டி ஸ்டேட்டஸ் போட்டுள்ளார்.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus