நானியின் ‘தசரா’ படத்தின் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடிலாவின் திருமண புகைப்படங்கள்!

  • June 1, 2023 / 08:08 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நானி. இவர் நடித்த ‘தசரா’ படம் இந்த ஆண்டு (2023) மார்ச் 30-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கியிருந்தார். இதில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்திருந்தார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சாய் குமார், சமுத்திரக்கனி, ஷைன் டாம் சாக்கோ, பூர்ணா மற்றும் பலர் நடித்திருந்தனர்.

இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று மெகா ஹிட்டானது. உலக அளவில் இந்த படம் ரூ.118.5 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது. தற்போது, இதன் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடிலாவுக்கு திருமணம் நடைபெற்றதாக தகவல் கிடைத்துள்ளது. இவரின் திருமண புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus