சூப்பர் ஹிட்டான நானியின் ‘தசரா’… OTT-யில் எப்போது ரிலீஸ் தெரியுமா?

  • April 20, 2023 / 05:13 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படமான ‘தசரா’ கடந்த மார்ச் 30-ஆம் தேதி தெலுங்கு, தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் என ஐந்து மொழிகளில் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடிலா இயக்கியுள்ளார். இதில் நானிக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோல்களில் சாய் குமார், சமுத்திரக்கனி, ஷைன் டாம் சாக்கோ, பூர்ணா மற்றும் பலர் நடித்துள்ளனர்.

இதற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார், சத்யன் சூர்யன் ஒளிப்பதிவு செய்துள்ளார், நவீன் நூலி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இதனை ‘ஸ்ரீ லக்ஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ்’ என்ற நிறுவனம் தயாரித்துள்ளது.

தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமின்றி, பாக்ஸ் ஆஃபீஸிலும் ரூ.100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தை வருகிற ஏப்ரல் 27-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ல் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Ott Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus