Hi Nanna : 2 வாரத்தில் நானியின் ‘ஹாய் நான்னா’ செய்த வசூல் இத்தனை கோடியா?

  • December 21, 2023 / 06:48 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஹாய் நான்னா’. இப்படம் கடந்த டிசம்பர் 7-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் சௌர்யுவ் இயக்கியுள்ளார். இதில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் பேபி கியாரா நடித்துள்ளார்.

இதற்கு ஹேஷம் அப்துல் வாஹப் இசையமைத்துள்ளார், சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், கடந்த 14 நாட்களில் இப்படம் உலக அளவில் ரூ.64.30 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Collections Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus