Hi Nanna : அடேங்கப்பா… நானியின் ‘ஹாய் நான்னா’ படத்தின் மொத்த வசூல் இத்தனை கோடியா?

  • January 31, 2024 / 11:12 AM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நானி. இவர் நடித்த ‘ஹாய் நான்னா’ படம் கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 7-ஆம் தேதி தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸானது.

இந்த படத்தை இயக்குநர் சௌர்யுவ் இயக்கியுள்ளார். இதில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் பேபி கியாரா நடித்துள்ளார்.

இதற்கு ஹேஷம் அப்துல் வாஹப் இசையமைத்துள்ளார், சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று சூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், உலக அளவில் இந்த படத்தின் மொத்த வசூல் ரூ.73 கோடி என தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus