Hi Nanna : நானியின் ‘ஹாய் நான்னா’… இத்தனை கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகுமா?

  • December 6, 2023 / 03:21 PM IST

தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் நானி. இவர் நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் ‘ஹாய் நான்னா’. இந்த படத்தை இயக்குநர் சௌர்யுவ் இயக்கியுள்ளார்.

இதில் நானிக்கு ஜோடியாக மிருணாள் தாகூர் நடித்துள்ளார். மேலும், மிக முக்கிய ரோலில் பேபி கியாரா நடித்துள்ளார். இதற்கு ஹேஷம் அப்துல் வாஹப் இசையமைத்துள்ளார், சனு ஜான் வர்கீஸ் ஒளிப்பதிவு செய்துள்ளார், பிரவீன் ஆண்டனி படத்தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார்.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்தது. படத்தை நாளை (டிசம்பர் 7-ஆம் தேதி) தெலுங்கு மொழி மட்டுமின்றி தமிழ், ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளிலும் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். தற்போது, இப்படம் உலக அளவில் ரூ.28.50 கோடி வசூலித்தால் தான் பிரேக் ஈவன் ஆகும் என்று தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus