பதினைந்து வருட பிரச்சனை ..நான் ரெடி …. விஜய் ரெடியா ….?
January 28, 2023 / 03:41 PM IST
|Follow Us
நடிகர் விஜய் நடிப்பில் வம்சி இயக்கத்தில் சமீபத்தில் வெளியாகி உள்ள படம் வாரிசு . தெலுங்கில் பிரபல தயாரிப்பாளராக இருக்கும் தில் ராஜு இந்த படத்தை தயாரித்து இருந்தார் . ராஷ்மிகா நாயகியாக நடித்துள்ள இந்த படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். கலவையான விமர்சனங்களுடன் இந்த படம் திரையரங்கில் ஓடி வருகிறது .
இந்நிலையில் நடிகர் விஜய் நடிப்பில் 2007 -ஆம் ஆண்டு வெளியான படம் போக்கிரி . இந்த படத்தில் நடிகர் நெப்போலியன் ஒரு முக்கிய பாத்திரத்தில் நடித்து இருந்தார் . இந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் விஜய் நெப்போலியனை அவமரியாதையாக நடத்தியதாக ஒரு பேட்டியில் நெப்போலியன் கூறி இருந்தார் .
தற்போது பிரபல வளையொலிக்கு பேட்டி அளித்த நெப்போலியனிடம் மீண்டும் விஜய்யுடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு உள்ளதா என்று கேட்கப்பட்டது . இதற்கு பதில் அளித்த நெப்போலியன் எனக்கும் விஜய்க்கும் இடையே நடந்த அந்த சம்பவம் நடந்து 15 வருடங்கள் ஆகிறது அதை எல்லாம் மறந்து திரும்ப பணியாற்ற நான் தயார் ..அதற்க்கு விஜய் தயாரா என்று கேட்டுள்ளார் மேலும் விஜய்யுடன் இணைந்து போக நான் ரெடி விஜய் ரெடியா என்று கேள்வி எழுப்பி உள்ளார் மேலும் விஜய் பெத்த தாய் தகப்பன் கூடயே பேசாம இருக்கார் என்று ஊர் உலகத்தில் பேசப்படுகிறது அது உண்மையா பொய்யா எப்பிற்று கூட தெரியாது முதலில் அவரை தாய் தப்பனிடம் சமரசமாக போக சொல்லுங்க … நான் எப்பவும் இணைந்து போக ரெடி விஜய்யிடம் கேளுங்கள் அவர் ரெடியா என்று ..? என்று பதில் அளித்துள்ளார் நெப்போலியன் .