2014 ஆம் ஆண்டு எச்.வினோத் இயக்கத்தில் வெளியான “சதுரங்கவேட்டை” படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே நீங்காத இடத்தைப் பிடித்தவர் நடிகர் மற்றும் ஒளிப்பதிவாளர் நடராஜன் என்கிற நட்டி.
2002 ஆம் ஆண்டு வின்சென்ட் செல்வா இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான “யூத்” படத்தில் ஒளிப்பதிவாளராக தமிழ்த் திரையுலகிற்கு அறிமுகமானவர் நட்டி.
இந்த படத்தை தொடர்ந்து இயக்குனர் அனுராக் காஷ்யபுடன் இணைந்து பல இந்தி திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்திருந்தார். பிறகு தமிழில் 2012ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான “துப்பாக்கி” படத்தில் “வெண்ணிலவே” என்ற பாடலுக்கு மட்டும் இவர் ஒளிப்பதிவு செய்தார்.
தொடர்ந்து தமிழி, இந்தி, தெலுங்கு மலையாளம் ஆகிய மொழிப் படங்களுக்கு ஒளிப்பதிவு செய்து வந்த நட்டி “சதுரங்க வேட்டை” படத்தின் வெற்றிக்கு பின் தமிழில் நடிக்க தொடங்கினார்.
தற்போது நட்டி என்கிற நடராஜன், தமிழ் சினிமாவில் இந்தி சினிமா போன்று நெப்போடிசம் இல்லை, ஆனால் குரூப்பிசம் இருக்கிறது என்று அவரது கருத்தைப் பதிவிட்டுள்ளார். தமிழ் திரையுலகில் நட்டிக்கு நிறைய நண்பர்கள் இருந்தாலும், அவர் தமிழ் சினிமாவில் குரூப்பிசம் இருக்கிறது என்றிருக்கிறார். ஆனால் அவர் எந்த ஒரு பிரபலத்தின் பெயரையும் குறிப்பிடவில்லை.
இவர் குறிப்பிட்டுள்ளதாவது “தமிழ் சினிமால நெப்போடிசம் இருக்கா இல்லையான்னு தெரியலை… ஆனா குரூப்பிசம் இருக்கு.. யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க.. யாருங்க நீங்க???.” என்றிருக்கிறார்.
தமிழ் சினிமால நெபோட்டிசம் இருக்கா இல்லையான்னு தெரியல.. ஆனா குரூபிசம் இருக்கு… யாருக்கு என்ன கிடைக்கணுங்கிறத யாரோ நிர்ணயிக்கறாங்க… யாருங்க நீங்க????…
— N.Nataraja Subramani (@natty_nataraj) July 27, 2020
தற்போது நட்டி ஜெகன் ராஜ்சேகர் இயக்கத்தில் “காட்பாதர்” படத்திலும், மில்கா.எஸ்.செல்வகுமார் இயக்கத்தில் “சண்டி முனி” திரைப்படத்திலும், அன்பரசன் இயக்கத்தில் “வால்டர்” படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.