‘நவரசா’ ஆந்தாலஜி படத்தில் சூர்யா, விஜய் சேதுபதி… வெளியானது அசத்தலான ப்ரோமோ!

ஒரு ஹீரோ – ஹீரோயின், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து படங்கள் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல கதைகளை ஒரே படத்தில் ஒவ்வொன்றாக குறும்படம் போல் சொல்லப்படும் படங்களும் உண்டு. அது ஆந்தாலஜி படம் என்று சொல்வார்கள். இந்த ஆந்தாலஜி படங்களில் வரும் கதைகள் ஒரே ஜானரை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் வேறு ஜானரிலும் கதைகள் இருக்கலாம்.

தற்போது, தமிழில் உருவாகும் புதிய ஆந்தாலஜி படம் தான் ‘நவரசா’. இதில் ஒன்பது குறும்படங்கள் இருக்கிறதாம். பிரபல இயக்குநர்களான கே.வி.ஆனந்த், கெளதம் வாசுதேவ் மேனன், பிஜோய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்திரன்.ஆர்.பிரசாத் மற்றும் நடிகர் அரவிந்த் சாமி ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்குகின்றனர். இதில் அரவிந்த் சாமி, சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பிரசன்னா, பாபி சிம்ஹா, அசோக் செல்வன், ரேவதி, பார்வதி, பூர்ணா, ரித்விகா, அஞ்சலி, அதிதி பாலன், ரம்யா நம்பீசன் ஆகியோர் நடிக்கின்றனர்.

இதனை இயக்குநர் மணிரத்னம் – ஜெயந்திரா இணைந்து தயாரிக்கின்றனர். தற்போது, இந்த படத்தின் ப்ரோமோவை ரிலீீஸ் செய்துள்ளனர். இந்த ப்ரோமோ படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்துள்ளது. விரைவில் இந்த படம் ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸாகுமாம்.


Share.