சூர்யா – விஜய் சேதுபதி நடித்துள்ள ஆந்தாலஜி வெப் சீரிஸ் ‘நவரசா’… எப்போது ரிலீஸ்?

  • July 6, 2021 / 10:17 AM IST

ஒரு ஹீரோ – ஹீரோயின், அதற்கென ஒரு கதைக்களம் என தொடர்ந்து வெப் சீரிஸ் வந்து கொண்டிருக்கிறது. ஆனால், பல கதைகளை ஒவ்வொரு எபிசோடிலும் குறும்படம் போல் சொல்லப்படும் வெப் சீரிஸ்களும் உண்டு. அது ஆந்தாலஜி வெப் சீரிஸ் என்று சொல்வார்கள். இந்த ஆந்தாலஜி வெப் சீரிஸ்களில் வரும் கதைகள் ஒரே ஜானரை மையமாக வைத்து உருவாகலாம், அல்லது ஒன்றுக்கு ஒன்று சம்பந்தம் இல்லாமல் வேறு ஜானரிலும் கதைகள் இருக்கலாம்.

தற்போது, தமிழில் உருவாகியுள்ள புதிய ஆந்தாலஜி வெப் சீரிஸ் தான் ‘நவரசா’. இதில் ஒன்பது குறும்படங்கள் இருக்கிறதாம். பிரபல இயக்குநர்களான கெளதம் வாசுதேவ் மேனன், பிஜோய் நம்பியார், கார்த்திக் சுப்புராஜ், கார்த்திக் நரேன், ரதிந்திரன்.ஆர்.பிரசாத், ப்ரியதர்ஷன், வஸந்த், ஹலிதா ஷமீம் மற்றும் நடிகர் அரவிந்த் சாமி ஒவ்வொரு குறும்படத்தையும் இயக்கியுள்ளனர்.

இதில் அரவிந்த் சாமி, சூர்யா, சித்தார்த், விஜய் சேதுபதி, பிரகாஷ் ராஜ், பிரசன்னா, பாபி சிம்ஹா, விக்ராந்த், யோகி பாபு, ரேவதி, பார்வதி, பூர்ணா, அதிதி பாலன், பிரயாகா மார்டின் ஆகியோர் நடித்துள்ளனர். இதனை இயக்குநர் மணிரத்னம் – ஜெயந்திரா இணைந்து தயாரித்துள்ளனர். சமீபத்தில், இதன் ப்ரோமோவை ரிலீீஸ் செய்தனர். இந்நிலையில், இவ்வெப் சீரிஸை வருகிற ஆகஸ்ட் 9-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’-யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus