1999-ஆம் வருடமே தன் நடிப்பு பயணத்தை ஆரம்பித்த நவாசுதீன் சித்திக். சிறு சிறு வேடங்களில் நடித்து வந்தார். 2012ம் ஆண்டு வெளிவந்த”பதாங்” படத்தின் மூலம் நடிகராக மாறிய இவர், தனது நடிப்புத் திறமைக்காக மிகவும் பாராட்டப்பட்டார்.
இவர் இயக்குனர் அனுராக் காஷ்யப்புடன் இணைந்து ப்ளாக் ஃப்ரைடே,ராமன் ராகவ் ஆகிய படங்களிலும், கேங்ஸ் ஆஃப் வசியேபூர்,சேக்ரட் கேம்ஸ் என்ற வெப்சிரீஸிலும் நடித்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றார்.
கேன்ஸ் திரைப்பட திருவிழாவில் இவருடைய 8 படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, திரையிடப்பட்டது. உலகில் உள்ள அனைத்து நடிகர்களிலும் இவருக்கு மட்டுமே இந்த பெருமை உள்ளது.
இவர் தமிழில் சென்ற ஆண்டு கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளிவந்த “பேட்ட”படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினியின் வில்லனாக நடித்துள்ளார்.
நடிப்பு திறமைக்கென பல விருதுகளை பெற்ற இவர் சினிமாவில் மிகவும் பிஸியான நபர்.எனினும் உத்தரபிரதேசத்தில் உள்ள அவரது கிராமத்தில் முடிந்தபோதெல்லாம் விவசாயத்தில் ஈடுபடுவாராம்.
Done for the day !!! pic.twitter.com/1oXDUS4E8m
— Nawazuddin Siddiqui (@Nawazuddin_S) June 22, 2020
இந்த லாக்டவுன் காலத்தில் முழுநேரமாக விவசாயத்தில் ஈடுபட்டுள்ள இவர், தற்போது தான் விவசாயம் செய்வது போன்ற வீடியோவை வெளியிட்டுள்ளார். இவ்வளவு புகழ் இருந்தும் இவ்வளவு எளிமையாக வேலை செய்யும் இவரை பாராட்டி, அவரது ரசிகர்கள் இந்த வீடியோவை வைரலாக்கி வருகிறார்கள்.