இசைப்புயல் ஏ.ஆர் ரகுமான் நவாசுதீன் சித்திக் நடிப்பில் அடுத்து வெளியாகவிருக்கும் “நோ மேன்ஸ் லேண்டிங்” என்ற திரைப்படத்திற்கு துணை தயாரிப்பாளராகவும் இசை அமைப்பாளராகவும் இணைந்துள்ளார்.
இந்த படத்தை பங்கிலாதேஷி இயக்குனர் மோஸ்டாபா சர்வார் பரூக்கி இயக்கவுள்ளார்.
இவர் நடிகர் இர்பான் கானை வைத்து “டுப் -நோ பெட் ஆஃப் ரோசஸ்” என்ற படத்தையும், “டெலிவிஷன்” என்ற படத்தையும் இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் ,தென் ஆசியாவைச் சேர்ந்த ஒருவன் அமெரிக்காவில் ஒரு ஆஸ்திரேலிய பெண்ணை சந்திப்பான், அதன்பின் அவன் எதிர்கொள்ளும் இக்கட்டான சூழ்நிலைகளை விளக்கியுள்ளதாம். இப்படத்தின் கதை அமெரிக்கா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளை சார்ந்ததாக அமையும் என்று திரைப்பட வட்டாரம் தெரிவிக்கிறது.
இதைப்பற்றி ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் .ரகுமான் கூறியதாவது “காலம் புது உலகத்தையும் புது சூழ்நிலைகளையும் ஒருவருக்கு உருவாக்கிக்கொண்டே இருக்கிறது. அவ்வாறான புது சூழலில் இருக்கும் ஒருவன் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பற்றிய கதையாக இருக்கும்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஏ .ஆர் ரகுமான் இதற்கு முன்பு “99சாங்ஸ்” என்ற படத்தை இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“நோ மேன்ஸ் லேண்டிங்” படத்தில் நடித்திருக்கும் நவாசுதீன் சித்திக் “லஞ்ச்பாக்ஸ்” மற்றும் வெப்சீரிஸ் “சேக்ரட் கேம்ஸ்” மூலம் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளார். இவர் இந்த படத்தில் நடித்தது பற்றி கூறியதாவது ” இந்த படப்பிடிப்பு நடைபெறும் போது கடினமாக இருந்தாலும் மிகவும் மனநிறைவாக இருந்தது. இந்த படத்தின் தயாரிப்பில் ஏ.ஆர். ரகுமான் சேர்ந்திருப்பது இந்த படத்திற்கு மேலும் சிறப்பம்சமாக அமையும் என்று எதிர்பார்க்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்தப்படத்தில் நவாசுதீன் ஜோடியாக ஆஸ்திரேலிய நாடகக் கலைஞர் மேகன்மிட்சல் நடித்துள்ளார். படம் ஆங்கில மொழியிலேயே இருக்கும் என்றும் அங்கங்கு இந்தி மற்றும் உருது மொழிகளில் வசனங்கள் பேசப்பட்டுள்ளது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றது. இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் கொரோனவைரஸ் லாக் டவுனால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.