சினிமாவில் பாப்புலர் ஹீரோயின்களில் ஒருவராக வலம் வருபவர் ஜோதிகா. இவர் கெஸ்ட் ரோலில் வந்த முதல் படமான ‘வாலி’-யிலேயே ரசிகர்களின் லைக்ஸை குவித்தார். அதன் பிறகு ஜோதிகாவின் கால்ஷீட் டைரியில் ‘பூவெல்லாம் கேட்டுப்பார், முகவரி, குஷி, ரிதம், தெனாலி, டும் டும் டும்’ என படங்கள் குவிந்தது.
பின், பிரபல நடிகர் சூர்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்ட ஜோதிகா, சில வருடங்கள் படங்களில் நடிக்காமல் இருந்தார். அதன் பிறகு ’36 வயதினிலே’ படத்தின் மூலம் மீண்டும் ரீ-என்ட்ரியானார். ’36 வயதினிலே’ படம் ஹிட்டானதும் மறுபடியும் ஜோதிகா செம பிஸியான நடிகையாக மாறி விட்டார்.
இப்போது ஜோதிகா கைவசம் ‘காதல்’ என்ற மலையாள படமும், ‘ஸ்ரீ’ என்ற ஹிந்தி படமும் இருக்கிறது. இந்நிலையில், ஜோதிகா நடிக்காமல் மிஸ் பண்ண ஒரு சூப்பர் ஹிட் படம் குறித்த தகவல் கிடைத்துள்ளது. 2008-யில் ரிலீஸான தமிழ் படம் ‘யாரடி நீ மோகினி’.
இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான மித்ரன்.ஆர்.ஜவஹர் இயக்க, ஹீரோவாக தனுஷ் நடித்திருந்தார். இதில் ஹீரோயினாக ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடித்திருந்தார். முதலில் இந்த படத்தில் ஹீரோயினாக நடிக்க வைக்க வேண்டுமென இயக்குநர் மித்ரன் ஜோதிகாவை அணுகியிருந்தாராம். பின், சில காரணங்களால் ஜோதிகாவால் இப்படத்தில் நடிக்க முடியாமல் போனதாம்.