விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா நடிப்பில் வெளியான படம் நானும் ரவுடி தான் . இந்த படம் உருவாகி கொண்டு இருந்த பொழுதே விக்னேஷ் சிவனுக்கும் நயன்தாராக்கும் காதல் ஏற்பட்டது . இந்த படத்திற்கு பிறகு இவர்களது கூட்டணியில் நீண்ட நாட்களாக படம் வரவில்லை . இந்நிலையில் வருகின்ற ஏப்ரல் 28ஆம் தேதி விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோர் நடிப்பில் உருவாகி உள்ள படம் காத்து வாக்குல ரெண்டு காதல் . இந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி உள்ளார் .
நடிகை நயன்தாராவும் இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கடந்த வருடம் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்தது .ஆனால் இவர்கள் இருவரும் எப்பொழுது திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்று ரசிகர்களுக்கு அறிவிக்கவில்லை .
ஆனால் தற்போது விக்னேஷ் சிவன்-நயன்தாரா இருவரும் ஜூன் மாதம் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாக தகவல் வெளியாகி இருந்தது . மேலும் நயன்தாராவின் சொந்த ஊரான கேரளா அல்லது வெளிநாட்டில் இவர்களது திருமணம் நடைபெற வாய்ப்பிருப்பதாகவும் செய்திகள் வெளியாகி இருக்கிறது பிறகு தகவல் இவர்களது திருமணம் திருப்பதியில் நடக்க இருப்பதாக வெளியானது . ஆனால் இதை எதையும் அவர்கள் அதிகாரபூர்வமாக தெரிவிக்கவில்லை .
இந்நிலையில் இணையத்தில் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவனின் கல்யாண பத்திரிகை ஒன்று இணையத்தில் பரவி வருகிறது .மேலும் ஜூன் 09-ஆம் தேதி இவர்களது திருமணம் நடக்க இருப்பதாகவும் அதில் போட்டுள்ளது . இதை பலரும் இணையத்தில் பகிர்ந்து வருகின்றனர் .