‘ராக்கி’ படத்தை பார்ப்பதற்காக திரையரங்கிற்கு ஜோடியாக சென்ற நயன்தாரா – விக்னேஷ் சிவன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • December 29, 2021 / 06:10 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட்’, அறிமுக இயக்குநர் விக்னேஷ் படம், மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடிக்கின்றனர். இந்த படத்தின் ஷூட்டிங் பரபரப்பாக நடைபெற்று வருகிறது.

விக்னேஷ் சிவனும், நயன்தாராவும் இணைந்து தங்களது ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்த ‘ராக்கி’ படம் கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. அறிமுக இயக்குநர் அருண் மாதேஸ்வரன் இயக்கியிருந்த இந்த படத்தில் வசந்த் ரவி, ரவீனா ரவி, பாரதிராஜா மற்றும் பலர் நடித்திருந்தனர். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் இணைந்து சென்னையில் உள்ள ஒரு திரையரங்கிற்கு சென்று இப்படத்தை ஆடியன்ஸுடன் பார்த்து ரசித்துள்ளதக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus