வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுடன் இருக்கும் ஸ்டில்ஸ்!

  • October 25, 2022 / 02:53 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, மலையாளத்தில் ‘கோல்டு’, ஹிந்தியில் ‘ஜவான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், நயன்தாராவின் 75-வது படம் (தமிழ்) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளாராம். இவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

இந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே, பிரபல OTT நிறுவனமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ இவர்களின் திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு வாங்கியிருந்தது.

கடந்த அக்டோபர் 9-ஆம் தேதி விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. தற்போது, விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தீபாவளி வாழ்த்து தெரிவித்ததுடன், நயன்தாரா மற்றும் குழந்தைகளுடன் இருக்கும் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus