தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் இயக்குநர் துரை செந்தில்குமார் படம், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படம், ஹிந்தியில் ‘ஜவான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
கடந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.
இந்நிலையில், நயன்தாரா – விக்னேஷ் சிவன் குலதெய்வ கோயிலுக்கு சென்றுள்ளனர். அங்கு இவர்களை பார்க்க ரசிகர்கள் குவிந்து விட்டனர். கூட்டத்தில் ஒரு பெண் நயன்தாராவின் தோள்பட்டையில் கை வைத்துவிட, அவர் டக்கென திரும்பி அப்பெண்ணை முறைத்திருக்கிறார்.
இதனைத் தொடர்ந்து ரயிலில் நயன்தாராவும், விக்னேஷ் சிவனும் சென்று ஏறும்போது, அங்கிருந்த ரசிகர் ஒருவர் அவரை மொபைலில் போட்டோ எடுத்துக் கொண்டிருந்தார். அதை பார்த்த நயன்தாரா டென்ஷனாகி “போட்டோ எடுத்தீங்கன்னா போனை உடைச்சிடுவேன்” என்று கோபமாக மிரட்டியிருக்கிறார். இந்த இரண்டு சம்பவங்களும் நடந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.