கல்லூரி நிகழ்ச்சியில் நயன்தாரா! வைரலாகும் ஸ்டில்ஸ்

  • February 8, 2023 / 10:12 AM IST

தமிழில் முன்னணி நடிகைகளில் ஒருவர் நயன்தாரா . இவர் 20 ஆண்டை சினிமா துறையில் நிறைவு செய்துள்ளார். சொந்த வாழ்க்கையில் சில காலம் இவர் பிரச்சனைகளை சந்தித்து இருந்தாலும் பின்பு அதில் இருந்து மீண்டு வந்து பல வெற்றிப் படங்களை கொடுத்துள்ளார் .

சமீபத்தில் இவர் நடிப்பில் கனெக்ட் என்ற ஹாரர் படம் வெளியானது. இந்த படம் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெறவில்லை.கல்யாணத்திற்கு பிறகு இவர் தனது 75-வது படத்தில் நடிக்க உள்ளார். மேலும் பாலிவுட் படமான ஜவான் படத்திலும் நடித்து வருகிறார்.

இந்நிலையில் நயன்தாரா தனது பட விழாக்களிலே கலந்துக்கொள்வதில்லை . தான் தயாரித்து நடிக்கும் படங்களின் விழாக்களில் மட்டுமே பங்கேற்பார். இந்நிலையில் சமீபத்தில் தனியார் கல்லூரி நிகழ்ச்சியில் நயன்தாரா பங்கேற்றுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகின்றன.

 

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus