தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘மண்ணாங்கட்டி Since 1960, அன்னபூரணி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘அன்னபூரணி’ படம் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்ற இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் நயன்தாராவின் கேரியரில் 75-வது படமாம். இதில் மிக முக்கிய ரோல்களில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரேணுகா, கார்த்திக் குமார் ஆகியோர் நடித்துள்ளனர்.
இதனை ‘ஜீ ஸ்டுடியோஸ் – NAAD ஸ்டுடியோஸ் – டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. தற்போது, இந்த படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் புரமோஷனுக்காக நயன்தாரா மற்றும் ஜெய் தங்களது ரசிகைகளை சந்தித்து பிரியாணி பரிமாறியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
Briyani is even more special when Poorni serves it 🙂 #Annapoorani serving now in cinemas near you.
Enjoy the feast ❤️ pic.twitter.com/pf66rJCymI
— Zee Studios South (@zeestudiossouth) December 3, 2023