அடேங்கப்பா… விக்னேஷ் சிவனின் பர்த்டேவுக்காக இவ்வளவு பணம் செலவு செய்தாரா நயன்தாரா?

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் ‘நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ என நான்கு தமிழ் படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார். சமீபத்தில், இவர்களின் திருமணம் தொடர்பாக விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி ஒன்றில் “எங்களுக்கு சில ப்ளான்ஸ் இருக்கு. அதை எல்லாம் முதல்ல முடிக்கணும். இப்போதைக்கு நாங்க எங்க வேலையில தான் அதிக கவனம் செலுத்துறோம்.

எப்போ நாங்க பண்ணிட்டு இருக்குற லவ் போர் அடிக்குதோ, அப்போ தான் திருமணம் செய்து கொள்வோம். அந்த டைம் நாங்களே அதிகாரப்பூர்வமா அறிவிப்போம்” என்று கூறியிருந்தார். கடந்த செப்டம்பர் 18-ஆம் தேதி கோவாவில் வைத்து தனது பிறந்த நாளை கொண்டாடினார் விக்னேஷ் சிவன். அவருக்கு நயன்தாரா கொடுத்த பர்த்டே சர்ப்ரைஸ் (ஸ்பெஷல் கேக் மற்றும் இசைக் கச்சேரி) வீடியோ சமூக வலைத்தளங்களில் வெளியாகி தீயாய் பரவியது. தற்போது, விக்னேஷ் சிவனின் பர்த்டேவுக்காக நயன்தாரா ரூ.25 லட்சம் செலவு செய்ததாக தகவல் கிடைத்துள்ளது.

Share.