‘கனெக்ட்’ ப்ரீமியர் ஷோவில் கலந்து கொண்ட நயன்தாரா – விக்னேஷ் சிவன்… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • December 21, 2022 / 02:21 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, இயக்குநர் துரை செந்தில்குமார் படம், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படம், ஹிந்தியில் ‘ஜவான்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கனெக்ட்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அஷ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ஆகியோர் நடித்துள்ளனர். ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை நயன்தாராவின் கணவரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார்.

சமீபத்தில், இதன் டீசர் மற்றும் ட்ரெய்லர் வெளியிடப்பட்டது. இந்த டீசர் மற்றும் ட்ரெய்லர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்தது.

படத்தை வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், நேற்று சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் ப்ரீமியர் ஷோவில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் உட்பட பல திரையுலக பிரபலங்கள் கலந்து கொண்டதாக தகவல் கிடைத்துள்ளது. அப்போது எடுக்கப்பட்ட ஸ்டில்ஸ் வெளியாகி வைரலாகி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus