Nayanthara & Vignesh Shivan : காதலர் தினத்தை குழந்தைகளுடன் கொண்டாடிய விக்னேஷ் சிவன் – நயன்தாரா… வைரலாகும் ஸ்டில்ஸ்!

  • February 15, 2024 / 12:00 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘மண்ணாங்கட்டி Since 1960’, ‘டெஸ்ட்’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. 2022-ஆம் ஆண்டு ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார்.

பின், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. தற்போது, நேற்று (பிப்ரவரி 14-ஆம் தேதி) காதலர் தின ஸ்பெஷலாக எடுக்கப்பட்ட ஸ்டில்ஸை இயக்குநர் விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus