நயன்தாரா, விக்னேஷ் சிவனுக்கு நிச்சயதார்த்தம் நடந்ததா?… வைரலாகும் ஸ்டில்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாளத்தில் ‘நிழல், பாட்டு’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். சமீபத்தில், இவர்களின் திருமணம் தொடர்பாக விக்னேஷ் சிவன் அளித்த பேட்டி ஒன்றில் “எங்களுக்கு சில ப்ளான்ஸ் இருக்கு. அதை எல்லாம் முதல்ல முடிக்கணும். இப்போதைக்கு நாங்க எங்க வேலையில தான் அதிக கவனம் செலுத்துறோம்.

எப்போ நாங்க பண்ணிட்டு இருக்குற லவ் போர் அடிக்குதோ, அப்போ தான் திருமணம் செய்து கொள்வோம். அந்த டைம் நாங்களே அதிகாரப்பூர்வமா அறிவிப்போம்” என்று கூறியிருந்தார். இந்நிலையில், இன்று விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் ஒரு ஸ்டில்லை வெளியிட்டதுடன் “விரலோடு உயிர் கூட கோர்த்து” என்று பதிவிட்டுள்ளார். இந்த ஸ்டில்லில் நயன்தாரா கையில் மோதிரம் இருப்பதால், இவர்களுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக நயன்தாரா தரப்பில் விசாரித்த போது “நயன்தாரா பல மாதங்களாகவே அந்த மோதிரத்தை அணிந்திருக்கிறார். அவர்கள் இருவரும் கைவசம் வைத்திருக்கும் படங்களின் வேலைகளை முடித்த பிறகே திருமணம் செய்து கொள்வார்கள்” என்று கூறியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Vignesh Shivan (@wikkiofficial)

Share.