Nayanthara & Vignesh Shivan : தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் எடுத்த லேட்டஸ்ட் ஸ்டில்ஸை ஷேர் செய்த நயன்தாரா!
December 16, 2023 / 10:07 AM IST
|Follow Us
தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘மண்ணாங்கட்டி’, ‘அன்னபூரணி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘அன்னபூரணி’ படம் கடந்த டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்ற இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் நயன்தாராவின் கேரியரில் 75-வது படமாம்.
கடந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். பின், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது. தற்போது, நயன்தாரா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் எடுத்துக்கொண்ட லேட்டஸ்ட் ஸ்டில்ஸை வெளியிட்டுள்ளார்.