ஸ்பெயினில் விக்னேஷ் சிவனை கட்டியணைத்தபடி நிற்கும் நயன்தாரா… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் ‘ஜவான்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

சமீபத்தில், நயன்தாராவின் 75-வது படம் (தமிழ்) குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கவுள்ளாராம். இவர் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்றவராம்.

கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே, பிரபல OTT நிறுவனமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ இவர்களின் திருமண நிகழ்ச்சியின் ஒளிபரப்பு உரிமையை ரூ.25 கோடிக்கு வாங்கியிருந்தது.

கடந்த வாரம் ‘நெட்ஃப்ளிக்ஸ்’ நிறுவனம் மிக விரைவில் இவர்களின் திருமண நிகழ்ச்சியை ஒளிபரப்பும் தேதி அறிவிக்கப்படும் என்று குறிப்பிட்டு ஒரு GLIMPSE வீடியோவையும் வெளியிட்டிருந்தது. தற்போது, நயன்தாராவும் – விக்னேஷ் சிவனும் ஸ்பெயின் நாட்டிற்கு சுற்றுலா சென்றுள்ளனர். அங்கு எடுத்த ஸ்டில்ஸ் மற்றும் வீடியோவை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Share.