தாய்லாந்தில் நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவன்… தீயாய் பரவும் லேட்டஸ்ட் ஸ்டில்ஸ்!

  • June 22, 2022 / 06:19 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட், O2’, மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் ‘ஜவான்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘O2’ என்ற படம் கடந்த ஜூன் 17-ஆம் தேதி பிரபல OTT தளமான ‘டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸானது. இந்த படத்தை அறிமுக இயக்குநர் ஜி.எஸ்.விக்னேஷ் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் பரத் நீலகண்டன், ‘ரித்து ராக்ஸ்’ யூடியூப் சேனல் புகழ் ரித்விக் மற்றும் பலர் நடித்துள்ளனர்.

கடந்த ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா – இயக்குநர் விக்னேஷ் சிவனின் திருமணம் சென்னை மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட்டில் நடைபெற்றது. சமீபத்தில், நயன்தாரா தனது கணவர் விக்னேஷ் சிவனுடன் ஹனிமூனுக்காக தாய்லாந்துக்கு சென்றார். தற்போது, அங்கு எடுத்த சில ஸ்டில்ஸை விக்னேஷ் சிவன் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus