வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுடன் இருக்கும் ஸ்டில்ஸ்!

  • January 2, 2023 / 11:07 AM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, இயக்குநர் துரை செந்தில்குமார் படம், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படம், ஹிந்தியில் ‘ஜவான்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது.

இதில் ‘கனெக்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸானது. ஹாரர் த்ரில்லர் ஜானர் படமான இதனை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அஷ்வின் சரவணன் இயக்கியிருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

கடந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில், நேற்று விக்னேஷ் சிவன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நியூ இயர் வாழ்த்து சொன்னதுடன் சில ஸ்டில்ஸையும் வெளியிட்டுள்ளார். விக்னேஷ் சிவன் – நயன்தாரா தங்களது குழந்தைகளுடன் இருக்கும் இந்த ஸ்டில்ஸ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

Read Today's Latest Gallery Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus