வைரலாகும் நயன்தாரா – விக்னேஷ் சிவன் தங்களது இரட்டை ஆண் குழந்தைகளுடன் இருக்கும் வீடியோ!

  • March 9, 2023 / 11:24 AM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.

இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் இயக்குநர் துரை செந்தில்குமார் படம், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படம், ஹிந்தியில் ‘ஜவான்’ என மூன்று படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

கடந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி நடிகை நயன்தாரா பிரபல இயக்குநர் விக்னேஷ் சிவனை திருமணம் செய்து கொண்டார். சமீபத்தில், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.

இந்நிலையில், மும்பை விமான நிலையத்தில் விக்னேஷ் சிவன் – நயன்தாரா தங்களது குழந்தைகளுடன் வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus