தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.
‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘மண்ணாங்கட்டி Since 1960, அன்னபூரணி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘அன்னபூரணி’ படம் கடந்த ஆண்டு (2023) டிசம்பர் 1-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது.
இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்ற இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியிருந்தார். இப்படம் நயன்தாராவின் கேரியரில் 75-வது படமாம். இதில் மிக முக்கிய ரோல்களில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரேணுகா, கார்த்திக் குமார் ஆகியோர் நடித்திருந்தனர்.
இதனை ‘ஜீ ஸ்டுடியோஸ் – NAAD ஸ்டுடியோஸ் – டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தது. சமீபத்தில், இப்படம் பிரபல OTT தளமான ‘நெட்ஃப்ளிக்ஸ்’ல் ரிலீஸானது. தற்போது, இதில் இந்து மத உணர்வுகளை புண்படுத்தியதாக சர்ச்சை எழுந்த நிலையில், ‘நெட்ஃப்ளிக்ஸ்’ நிறுவனம் இப்படத்தை தற்காலிகமாக நீக்கியுள்ளது. மிக விரைவில் படத்தில் இடம்பெற்ற சர்ச்சைக்குரிய காட்சிகள் நீக்கப்பட்டு மீண்டும் ‘நெட்ஃப்ளிக்ஸ்’ல் ரிலீஸாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
Huge win for Hindu Ekta
Anti Hindu movie #Annapoorani removed from Netflix
Thank you so much @ianuragthakur bhai
And big thanks to all Hindus across the globe and all Hindu organizations for coming together
Desh aur dharm ke liye hum hamesha ek hai aur ek rahege
Jai Sri… pic.twitter.com/Id5FLOxVa5— Ramesh Solanki (@Rajput_Ramesh) January 11, 2024