தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாளத்தில் ‘நிழல்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடிக்கின்றனர்.
‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமாருடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் தனது ‘ரௌடி பிக்சர்ஸ்’ மூலம் தயாரிக்கும் இந்த படத்தின் ஷூட்டிங் நேற்று (டிசம்பர் 10-ஆம் தேதி) முதல் பூஜையுடன் ஆரம்பிக்கப்பட்டு ஜெட் ஸ்பீடில் நடந்து வருகிறது. இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இதற்கு ஒளிப்பதிவு செய்து வருவது விஜய் கார்த்திக் கண்ணன் என விக்னேஷ் சிவன் ட்விட்டரில் கூறியுள்ளார். இவர் அமலா பாலின் ‘ஆடை’ படத்துக்கு ஒளிப்பதிவு செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.
Cheers to this new age , next gen Director of Photography @KVijayKartik
so happy & excited to see my script through your eyes bro
your great taste for aesthetics & willingness to experiment is gonna take u to Great heights
Welcome to #TeamKRK #KaathuVaakulaRenduKadhal pic.twitter.com/S427tO4rpb
— Vignesh Shivan (@VigneshShivN) December 11, 2020