நயன்தாராவின் ஹாரர் படமான ‘கனெக்ட்’… வெளியானது மேக்கிங் வீடியோ!

  • January 3, 2023 / 05:14 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, இயக்குநர் துரை செந்தில்குமார் படம், இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படம், ஹிந்தியில் ‘ஜவான்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருந்தது. இதில் ‘கனெக்ட்’ திரைப்படம் கடந்த ஆண்டு (2022) டிசம்பர் 22-ஆம் தேதி திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என மூன்று மொழிகளில் ரிலீஸானது.

ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அஷ்வின் சரவணன் இயக்கியுள்ளார். இதில் மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ஆகியோர் நடித்துள்ளனர்.

இந்த படத்தை நயன்தாராவின் கணவரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்துள்ளார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இந்த படத்தின் மேக்கிங் வீடியோவை ரிலீஸ் செய்துள்ளனர்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus