நயன்தாராவின் ஹாரர் படமான ‘கனெக்ட்’… எதிர்பார்ப்பை எகிற வைத்த டீசர்!

  • November 18, 2022 / 07:19 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘கனெக்ட்’, அறிமுக இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா படம், மலையாளத்தில் ‘கோல்டு’, ஹிந்தியில் ‘ஜவான்’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘கனெக்ட்’ படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான அஷ்வின் சரவணன் இயக்குகிறார். இதில் மிக முக்கிய ரோல்களில் சத்யராஜ், அனுபம் கெர், வினய் ஆகியோர் நடித்துள்ளனர்.

ஹாரர் த்ரில்லர் ஜானரில் உருவாகி வரும் இந்த படத்தை நயன்தாராவின் கணவரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் தனது ‘ரௌடி பிக்சர்ஸ்’ நிறுவனம் சார்பில் தயாரித்து வருகிறார். தற்போது, இதன் டீசரை இன்று நயன்தாராவின் பிறந்தநாள் ஸ்பெஷலாக ரிலீஸ் செய்துள்ளனர்.

இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி, படத்தின் மீதான எதிர்பார்ப்பையும் எகிற வைத்துள்ளது. படத்தை வருகிற டிசம்பர் 22-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

Read Today's Latest Videos Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus