தமிழ் சினிமாவில் பாப்புலர் இயக்குநர்களில் ஒருவராக வலம் வருபவர் விக்னேஷ் சிவன். இவர் ‘போடா போடி, நானும் ரௌடி தான், காத்து வாக்குல ரெண்டு காதல்’ ஆகிய படங்களை இயக்கியிருக்கிறார்.
கடந்த ஆண்டு (2022) ஜூன் 9-ஆம் தேதி முன்னணி நடிகை ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவை விக்னேஷ் சிவன் திருமணம் செய்து கொண்டார். பின், விக்னேஷ் சிவன் – நயன்தாரா தம்பதியினருக்கு வாடகைத் தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்தது.
இந்நிலையில், நேற்று முன் தினம் (செப்டம்பர் 18-ஆம் தேதி) விக்னேஷ் சிவனின் பிறந்தநாள் என்பதால் திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அவருக்கு சமூக வலைத்தளங்களில் வாழ்த்து தெரிவித்தனர். தற்போது, விக்னேஷ் சிவனின் பர்த்டே பார்ட்டியின் போது எடுத்த வீடியோஸ் வெளியாகியுள்ளது.
#VigneshShivan 's Birthday celebrations ✨️ #Nayanthara #LokeshKanagaraj #Shankar pic.twitter.com/QvwWRQCye9
— Aadhavi (@Classicparktv) September 19, 2023