தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், மூக்குத்தி அம்மன், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாளத்தில் ‘நிழல்’ என ஐந்து படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.
இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ‘நெற்றிக்கண்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை நயன்தாராவின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கவிருக்கிறார்.
மேலும், ‘நெற்றிக்கண்’ படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க, மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார். விக்னேஷ் சிவன் இயக்கி நயன்தாரா – விஜய் சேதுபதி நடித்த ‘நானும் ரௌடி தான்’ வெளியாகி இன்றோடு ஐந்து ஆண்டுகள் ஆகி விட்டது. ஆகையால், இந்த ஸ்பெஷல் நாளில் ‘ரௌடி பிக்சர்ஸ்’ என்று பெயரிடப்பட்டுள்ள தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படமான ‘நெற்றிக்கண்’-யின் ஃபர்ஸ்ட் லுக்கை நாளை (அக்டோபர் 22-ஆம் தேதி) மாலை 6 மணிக்கு ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக விக்னேஷ் சிவன் ட்விட்டரில் அறிவித்துள்ளார்.
https://twitter.com/VigneshShivN/status/1318873243000786945