தியேட்டருக்கு நோ… OTT-யில் ரிலீஸாகப்போகும் நயன்தாராவின் ‘நெற்றிக்கண்’!

  • July 21, 2021 / 12:57 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘நெற்றிக்கண், அண்ணாத்த, காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் மலையாளத்தில் ‘பாட்டு’ என நான்கு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ மற்றும் ‘நெற்றிக்கண்’ ஆகிய இரண்டு திரைப்படங்களும் நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படத்தை நயன்தாராவின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார்.

மேலும், ‘நெற்றிக்கண்’ படத்தை விக்னேஷ் சிவன் தயாரிக்க, மிலிந்த் ராவ் இயக்கி வருகிறார். சமீபத்தில், ரிலீஸ் செய்யப்பட்ட ‘நெற்றிக்கண்’ ஃபர்ஸ்ட் லுக் டீசர் மற்றும் இப்படத்தின் ‘இதுவும் கடந்து போகும்’ என்ற பாடல் படத்தின் மீதான எக்ஸ்பெக்டேஷன் லெவலை எகிற வைத்தது. தற்போது, இந்த படத்தை பிரபல OTT தளமான ‘டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார்’யில் ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. மிக விரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படுமாம்.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus