பிரபல நடிகருடன் 12 வருடங்களுக்கு பிறகு புகைப்படம் வெளியிட்ட நயன்தாரா!

  • November 24, 2020 / 09:41 PM IST

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்தை வென்ற நடிகை நயன்தாரா சரத்குமார் நடிப்பில் வெளியான ‘அய்யா’ திரைப்படத்தின் மூலம் அறிமுகமாகி, பின் சூப்பர் ஸ்டாருடன் ‘சந்திரமுகி’ திரைப்படத்தில் நடித்து பிரபலமானவர்.

ஒவ்வொரு படியிலும் மிகவும் கஷ்டப்பட்டு தற்போது லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்தை பெற்றுள்ள இவரது சொந்த வாழ்க்கையில் பல பிரச்சனைகள் இருந்தும் அந்த சவால்களை தாண்டி தற்போது வெற்றி நடிகையாக வலம் வருகிறார்.

தற்போது ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகியுள்ள ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படம் கடந்த தீபாவளியன்று ஹாட்ஸ்டாரில் வெளியாகி ரசிகர்களிடையே வைரலாக தற்போது ரசிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 12 வருடங்களுக்கு பிறகு மீண்டும் பிரபல மலையாள நடிகர் குஞ்சகோ போபன் உடன் இணைந்து இவர் நடிக்கவுள்ளதாகவும், இதனால் இவரது குடும்பத்துடன் அதிகமாக நேரத்தை செலவிட்டு வரும் நயன்தாரா அவருடன் தற்போது புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus