Annapoorani : அடேங்கப்பா… ‘அன்னபூரணி’-க்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • November 29, 2023 / 10:05 AM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள்.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘மண்ணாங்கட்டி Since 1960, அன்னபூரணி’ என இரண்டு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது. இதில் ‘அன்னபூரணி’ படத்தை பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றி சினிமா கற்ற இயக்குநர் நிலேஷ் கிருஷ்ணா இயக்கியுள்ளார். இப்படம் நயன்தாராவின் கேரியரில் 75-வது படமாம்.

இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் ஜெய், சத்யராஜ், அச்யுத் குமார், கே.எஸ்.ரவிக்குமார், ரேணுகா ஆகியோர் நடித்துள்ளனர். இதனை ‘ஜீ ஸ்டுடியோஸ் – NAAD ஸ்டுடியோஸ் – டிரைடென்ட் ஆர்ட்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது.

சமீபத்தில், வெளியிடப்பட்ட ட்ரெய்லர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. படத்தை வருகிற டிசம்பர் 1-ஆம் தேதி ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர். இந்நிலையில், இந்த படத்துக்காக நயன்தாரா ரூ.10 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Movie News Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus