அடேங்கப்பா… ‘கோலமாவு கோகிலா’ படத்தில் நடிப்பதற்காக நயன்தாரா வாங்கிய சம்பளம் இத்தனை கோடியா?

  • February 24, 2022 / 07:22 PM IST

தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். இப்போது ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட்’, அறிமுக இயக்குநர் விக்னேஷ் படம், மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருக்கிறது.

இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்குகிறார். இப்படத்தில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடிக்கின்றனர். படத்தை வருகிற ஏப்ரல் 28-ஆம் தேதி ரிலீஸ் செய்ய ப்ளான் போட்டுள்ளனர்.

‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாராவின் கேரியரில் மிக முக்கியமான படம் ‘கோலமாவு கோகிலா’. பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இதனை இயக்கியிருந்தார். இதில் நயன்தாரா ‘கோகிலா’ என்ற ரோலில் வலம் வந்து ரசிகர்களிடம் அப்ளாஸ் வாங்கினார். இந்த படத்தில் மிக முக்கிய ரோல்களில் யோகி பாபு, சரண்யா, ஆர்.எஸ்.சிவாஜி, அன்பு தாசன், ஜாக்குலின் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படம் மிகப் பெரிய ஹிட்டானது. தற்போது, நடிகை நயன்தாரா ‘கோலமாவு கோகிலா’-வுக்காக ரூ.3 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus