அடேங்கப்பா… ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’-யில் நடிக்க நயன்தாரா வாங்கிய சம்பளம் இவ்ளோவா?
May 16, 2022 / 11:00 AM IST
|Follow Us
தமிழ் நாடு, கேரளா, ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தை வைத்திருப்பவர் நடிகை நயன்தாரா. இவரை அவரது ரசிகர்கள் அன்புடன் ‘லேடி சூப்பர் ஸ்டார்’ என்று அழைத்து வருகிறார்கள். ‘லேடி சூப்பர் ஸ்டார்’ நயன்தாரா நடிப்பில் தமிழில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல், கனெக்ட், O2’, மலையாளத்தில் ‘கோல்டு’, தெலுங்கில் ‘காட்ஃபாதர்’, ஹிந்தியில் நடிகர் ஷாருக்கான் படம் என ஆறு படங்கள் லைன் அப்பில் இருந்தது.
இதில் ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ என்ற திரைப்படம், நயன்தாராவுக்கு ரொம்பவும் ஸ்பெஷல். ஏனெனில், இந்த படத்தை அவரின் காதலரும், பிரபல இயக்குநருமான விக்னேஷ் சிவன் இயக்கியுள்ளார். இப்படம் கடந்த ஏப்ரல் 28-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீஸானது. இதில் நயன்தாராவுடன் இணைந்து ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியும், சமந்தாவும் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு டாப் இசையமைப்பாளர்களில் ஒருவரான அனிருத் இசையமைத்திருந்தார். ‘7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ’ லலித் குமாருடன் சேர்ந்து விக்னேஷ் சிவன் தனது ‘ரௌடி பிக்சர்ஸ்’ மூலம் இதனை தயாரித்த்திருந்தார். தற்போது, இப்படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், இதில் நடிக்க நயன்தாரா ரூ.5 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் கிடைத்துள்ளது.
Pour jouer sans formalités lourdes, un casino sans kyc simplifie les démarches tout en gardant des paiements rapides et un support accessible.
Long-haul drivers can build genuine connections through shared interests and conversation on a trucker dating site, making it easier to meet someone who understands the road.