‘மாஸ்டர்’ படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடல்… சூப்பராக நடனமாடி அசத்திய நஸ்ரியா!

  • February 26, 2021 / 06:25 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஜய். இவரது ரசிகர்கள் ‘தளபதி’ என்று அன்போடு அழைத்து வருகிறார்கள். விஜய்யின் கடைசி படமான ‘பிகில்’ 2019-ஆம் ஆண்டு வெளியாகி மாஸ் ஹிட்டானது. இவர் நடித்திருக்கும் புதிய படமான ‘மாஸ்டர்’ கடந்த ஜனவரி 13-ஆம் தேதி பொங்கல் ஸ்பெஷலாக தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடத்திலும், கடந்த ஜனவரி 14-ஆம் தேதி ஹிந்தியிலும் (விஜய் தி மாஸ்டர்) ரிலீஸானது.

இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ளாராம். இதில் தளபதிக்கு ஜோடியாக மாளவிகா மோகனன் நடித்துள்ளார். தளபதிக்கு எதிரியாக விஜய் சேதுபதி நடித்துள்ளாராம். இவர்களுடன் முக்கிய ரோல்களில் அர்ஜுன் தாஸ், ஆண்ட்ரியா, ஷாந்தனு, தீனா, நாசர், சஞ்சீவ், ஸ்ரீநாத், பிரேம் குமார், கௌரி கிஷன், மகேந்திரன், ரம்யா, ஸ்ரீமன், ரமேஷ் திலக், சேத்தன் நடித்துள்ளனர்.

இந்த படம் தியேட்டர்களில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. மேலும், கடந்த ஜனவரி 29-ஆம் தேதி இப்படம் பிரபல OTT தளமான ‘அமேசான் ப்ரைம்’-யிலும் ரிலீஸானது. தற்போது, இந்த படத்தின் ‘வாத்தி கம்மிங்’ பாடலுக்கு பாப்புலர் நடிகையும், நடிகர் ஃபஹத் ஃபாஸிலின் மனைவியுமான நஸ்ரியா சூப்பராக நடனமாடி அசத்தியுள்ளார். இவ்வீடியோ சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus