தமிழ் திரையுலகில் 2010 ஆம் ஆண்டு வெளியான “சிந்து சமவெளி” படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகப்படுத்தப்பட்டவர் நடிகை அமலாபால்.
பின்பு மைனா, தெய்வத்திருமகள், காதலில் சொதப்புவது எப்படி, தலைவா, வேலையில்லா பட்டதாரி, பசங்க 2, அம்மா கணக்கு போன்ற வெற்றி படங்களில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை கொண்டிருக்கிறார்.
இவர் 2014 ஆம் ஆண்டு இயக்குனர் ஏ.எல்.விஜய்யை திருமணம் செய்துகொண்டார். பின்பு விவாகரத்து பெற்றுக் கொண்டது இந்த ஜோடி. தற்போது பவீந்தர் சிங் என்பவரை திருமணம் செய்துகொண்டதாக செய்தி வந்துள்ளது.
இந்த லாக்டோனில் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வரும் நடிகை அமலாபால், தனது புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார்.
தற்போது அவர் தனது சமூகவலைதளபக்கத்தில் கவர்ச்சிகரமான புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
தற்போது தன் ஆண் நண்பர்களுடன் மது கோப்பையுடன் இருக்கும் புகைப்படம், அவர்களுடன் பீச்சில் உல்லாசமாக இருக்கும் புகைப்படம் போன்றவற்றை வெளியிட்டு சில கருத்துக்களையும் பதிவிட்டு வருகிறார்.
https://www.instagram.com/p/CD3yTM5ja6j/?igshid=3911xpd5ehr8
இது மட்டுமின்றி சமீபத்தில் வாயிலிருந்து புகை விடுவது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டு எல்லா நற்பண்புகளும் சலவை செய்த துணிபோல இல்லை எல்லா மனிதர்களுக்கும் ஒளிவட்டம் இல்லை எல்லா பாவிகள் கையிலும் ரத்தம் இல்லை போன்ற கருத்தை வெளியிட்டுள்ளார்.
அமலாபாலின் இத்தகைய புகைப்படங்களுக்கு ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள். அறிமுக இயக்குனரான கே.ஆர்.வினோத் இயக்கத்தில் “அதோ அந்த பறவை போல” படத்தில் நடிகை அமலாபால் தற்போது நடித்து வருகிறார். இந்த படத்தில் இவருடன் ஆஷிஷ் வித்யார்த்தி மற்றும் சமீர் கோச்சர் நடிக்கிறார்கள். இந்த படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது.
https://www.instagram.com/p/CD6SkQrDxs_/?igshid=17h9tgdaqopvo