தலைவர் 169 எப்பொழுது தொடங்கும் ?

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடைசியாக வெளியான படம் அண்ணாத்த . இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி இருந்தார்.
கடந்த தீபாவளிக்கு வெளியான இந்தப்படம் கலவையான விமர்சனங்களை விமர்சனங்களை பெற்றது.

இந்த நிலையில் நடிகர் ரஜனிக்காந்தின் அடுத்த படத்தை இயக்க போவது யார் என்ற கேள்வி நிலவி வந்தது. வெங்கட் பிரபு, தேசிங்கு பெரிய சாமி , போன்ற இயக்குனர்களின் பெயர்கள் தலைவர் 169 படத்தை எடுக்கப்போவதாக இணையத்தில் வைரலானது. வெங்கட் பிரபு ரஜினியை சந்தித்து கதை கூறியுள்ளார் என்ற தகவலும் வெளியாகின.

இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தலைவர் 169 படத்தை தயாரிக்க உள்ளதாகவும் , இயக்குனர் நெல்சன் திலிப்குமார் அந்த படத்தை இயக்கு உள்ளதாகவும் தகவல் வெளிவந்தது.

இதை உறுதிப்படுத்தும் வகையில் இரண்டு மாதங்களுக்கு முன்பு சன் பிக்சர்ஸ் நிறுவனும் தலைவர் நெல்சன் இயக்கப்போவதை உறுதி செய்தது.

இந்த நிலையில் நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியாகி உள்ள பீஸ்ட் திரைப்படம் வருகின்ற ஏப்ரல் 13ம் தேதி வெளியாக உள்ளது. இதனை தொடர்ந்து நெல்சன் இயக்க உள்ள தலைவர் 169 படப்பிடிப்பு எப்பொழுது தொடங்கும் என்ற ரஜினிகாந்த் ரசிகர்களின் கேள்விக்கு விடை தந்துள்ளார் நெல்சன்.

வருகின்ற ஜீன் மாதம் படப்பிடிப்பு தொடங்க இருந்ததாகவும் ஆனால் ரஜினிகாந்த் அமேரிக்கா பயணம் செல்ல உள்ளதால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் படப்பிடிப்பு தொடங்கும் என்ற ஒரு பேட்டியில் தெரிவித்துள்ளார்.

Share.