நெல்சன் இயக்கும் ‘தலைவர் 169’… ஃபர்ஸ்ட் லுக் ரிலீஸுக்கு நாள் குறித்த ரஜினி!

  • May 18, 2022 / 06:56 PM IST

தமிழ் சினிமாவில் மட்டுமின்றி இந்திய திரையுலகமே வியந்து பார்க்கும் அளவுக்கு பல சாதனைகள் செய்து மக்கள் மனதிலும் எப்பவும் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் ஒரே நடிகர் ரஜினிகாந்த் தான். இவர் போலீஸாக மாஸ் காட்டிய ‘தர்பார்’ படம் 2020-ஆம் ஆண்டு தொடக்கத்தில் வெளியானது.

இந்த படத்துக்கு பிறகு ரஜினி, சிவா இயக்கத்தில் ‘அண்ணாத்த’ என்ற படத்தில் நடித்திருந்தார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரித்திருந்த இப்படம் கடந்த ஆண்டு (2021) நவம்பர் 4-ஆம் தேதி தீபாவளி ஸ்பெஷலாக திரையரங்குகளில் ரிலீஸானது. ரஜினியின் 169-வது படத்தை பாப்புலர் இயக்குநர்களில் ஒருவரான நெல்சன் இயக்க உள்ளார். ‘சன் பிக்சர்ஸ்’ நிறுவனம் தயாரிக்கவுள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைக்கவுள்ளாராம்.

இந்த படத்தில் ரஜினிக்கு மகளாக பிரியங்கா மோகன் நடிக்கவிருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படத்திற்கான ப்ரீ-புரொடக்ஷன் பணிகள் பரபரப்பாக நடைபெற்று வருகிறதாம். இதன் ஷூட்டிங்கை வருகிற ஆகஸ்ட் மாதம் ஆரம்பிக்க ப்ளான் போட்டுள்ளனர். இந்நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை வருகிற டிசம்பர் 12-ஆம் தேதி ரஜினியின் பர்த்டே ஸ்பெஷலாகவும், படத்தை அடுத்த ஆண்டு (2023) ஏப்ரல் 14-ஆம் தேதியும் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

Read Today's Latest Featured Stories Update. Get Filmy News LIVE Updates on FilmyFocus