தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்கள் மற்றும் நடிகர்களில் ஒருவராக விளங்கிய சுந்தர்ராஜன் அவர்களின் மகனான தீபக் சுந்தர்ராஜன் தற்போது விஜய் சேதுபதி மற்றும் டாப்ஸி இணைந்து நடிக்கும் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இதையொட்டி இந்த படத்தின் ஷூட்டிங் ஜெய்ப்பூரில் தொடங்கியதாகவும் அந்த ஷூட்டிங்கில் டாப்ஸி மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் காட்சிகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும் சமீபத்தில் செய்தி வந்தது.
மேலும் இந்த படத்தில் நடிகை ராதிகா, ஜெகபதிபாபு, யோகி பாபு உள்ளிட்டோரும் நடித்துவருகிறார்கள். இந்த படத்தில் புது ட்விஸ்டாக டாப்ஸி மற்றும் விஜய் சேதுபதி கதாபாத்திரங்கள் இரட்டை வேடங்களாக இருக்கும் என்று செய்தி வெளியிட்டார்கள்.
தற்போது இந்தப்படத்தின் படப்பிடிப்பில் புது பிரபலம் ஒருவர் சேர்ந்துள்ளார். லம்பர்கிணி என்ற மியூசிக் வீடியோவில் நடித்த நடிகை ஹர்ஷதா விஜய் இந்தப் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளாராம்.