சமீபத்தில் இணையதளம் முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டு வரும் செய்தி வனிதா மற்றும் பீட்டர் பால் திருமணம், அதன் தொடர்பான பிரச்சனைகளும் ஆகும்.
பீட்டர் பாலின் முதல் மனைவி ஹெலன் தங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை என்ற செய்தியை வெளியிட்டது முதலே பலரும் வனிதாவை விமர்சித்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்கள். இதற்கு தக்க பதிலடி கொடுத்து வந்த வனிதா, சமீபத்தில் சூர்யா தேவி என்பவர் மீது சைபர் புல்லியிங் கேஸ் ஒன்றையும் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து வனிதாவை மீண்டும் லட்சுமிராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் அரவிந்தர் ஆகியோர் விமர்சனம் செய்து வந்தார்கள். இதனால் வனிதா விஜயகுமார் சோஷியல் மீடியாவில் இருந்து விலகியிருக்க முடிவு செய்து, ட்விட்டரிலிருந்து விலகிவிட்டார்.
இவர் ட்விட்டரில் இருந்து விலகிய மறுநாளே மீண்டும் ட்விட்டர் பக்கம் வந்து தான் ஏன் ட்விட்டரிலிருந்து விலகினார் என்றும், யாருக்கும் தான் பயப்படவில்லை என்றும் கூறியிருந்தார்.
இதைத்தொடர்ந்து வனிதா தன் மீது விமர்சனம் செய்த லட்சுமி ராமகிருஷ்ணன், கஸ்தூரி, தயாரிப்பாளர் ரவீந்தர் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தார். இவரின் புகாரின் பேரில் சூர்யா தேவி கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியே வந்தார்.
இதைத் தொடர்ந்து சூர்யா தேவி மற்றும் லட்சுமி ராமகிருஷ்ணன் வனிதாவின் மீது வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தனர். அதுமட்டுமின்றி வனிதா மீது தஞ்சாவூர் நகர மக்களும் தங்கள் கலாச்சாரத்தை இழிவாக பேசியதாக ஒரு புகாரை அளித்திருந்தார்கள்.
இப்படி தொடர்ந்து வனிதா மீது புகார் வந்த நிலையில், தற்போது போரூர் காவல் நிலையத்தில் வனிதாவின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.
சென்னை அய்யப்பன்தாங்கல் குடியிருப்பு பகுதியில் அனுமதியின்றி அதிக நபர்களை கொண்டு கொரோனா காலத்தில் வனிதா தனது திருமண வரவேற்பு நிகழ்ச்சியை நடத்தியதாக, அந்த குடியிருப்பு சங்கத்தின் பொதுச் செயலாளர் நிஷா கோத்தாரி காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் தற்போது வனிதாவின் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.